E සි

வலியுடன் கூடிய பயணப் பாதைக்குப் பின்னால்

ஆராய்ச்சி அமைப்பு

வலியுடன் கூடிய பயணப் பாதையின் அடிப்படைத் தரவுகள் இலங்கையின் மேற்குப் பகுதியில் காணப்படும் கம்பஹா மற்றும் கொழும்பிலிருந்து சேகரிக்கப்பட்டது, இவை கிராமப்புற, நகரமயமாக்கப்படுகின்ற மற்றும் நகரமயமாக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் கொண்ட இரண்டு மாவட்டங்களாகும், இவற்றைத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான நோக்கம் விரைவில் மாற்றமடையும் மற்றும் நகரமயமாக்கப்படும் சமூக அமைப்புகளில் இருந்து ஆதாரங்களை வழங்குதல் ஆகும். இலங்கையின் இரு பெரிய பொது வைத்தியசாலைகளான கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கொழும்பு வடக்கிலுள்ள போதனா வைத்தியசாலை என்பன எமக்கு சுய காயப்படுத்தலினால் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பங்கள் மற்றும் சேவை வழங்குனர்களைச் சந்திப்பதற்கு வழிவகுத்தது.

மாதிரிகள் மற்றும் தரவுகளைச் சேகரித்தல்

போதனா வைத்தியசாலையில் ஒரு தொலைநோக்கு கண்காணிப்பு ஒழுங்கு முறை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இதில் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சுய காயப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட எல்லாப் பெண்களும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இந்தச் செயல் முறையின் மூலம் 210 பெண்கள் மற்றும் சிறுமிகளின் (13- 67 வயதுடைய) புதிய சுகாதாரப் பதிவுகள் மற்றும் நடைமுறையில் சேகரித்த வைத்தியசாலைப் பதிவுகளை எங்களால் சேகரிக்க முடிந்தது. தங்கள் கதைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய 170 பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் நேர்காணலை நடத்த முடிந்தது. மேலும் தேசிய வைத்தியசாலையில் சிறப்பு வார்ட்டில் சிகிச்சை பெறும் பெண்களிடமும் நாங்கள் நேர்காணலை நடத்தினோம். இதே சமயத்தில் கம்பஹாவில் தற்கொலை செய்து கொண்ட 32 பெண்களின் வழக்குகளையும் எம்மால் பகுப்பாய்வு செய்ய முடிந்தது.

தரவு சேகரிப்புக் கருவிகள்

பெண்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றுக்கொண்ட அனுபவங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உளவியல் மற்றும் சமூகவியல் உடற்கூறாய்வுப் பரிசோதனை முறைகள் ஆராய்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவியில் ஒருங்கிணைக்கப்பட்டன. இக்கருவியானது உயிர் தப்பிய மற்றும் இறந்த பெண்களின் சுயகாயப்படுத்தலைச் சூழவுள்ள தனிப்பட்ட மற்றும் சமூக சூழ்நிலைகளை ஆராய்கின்றது. மேலதிகமாக உயிர் தப்பிய பெண்கள் ஒரு கட்டமைக்கப்படாத கதை சொல்லல் முறையைப் பயன்படுத்தி தங்களுடைய வைத்தியசாலைக்கான பயணம் மற்றும் பெரும்பாலும் தற்கொலை ஆராய்ச்சிகளில் (உ+ம் உடற்கூறாய்வுப் பரிசோதனை) பயன்படுத்தப்படும் நிலையான கருவிகளில் உள்ள குறைபாடுகள் என்பவற்றை விவரித்தனர். சுகாதாரப் பதிவுகள் பின்வரும் தரவுகளைக் கொண்டிருந்தன அவையாவன சமூக மக்கள் தொகை சார் பண்புகள், வாழ்க்கைச் சூழ்நிலைகள் மற்றும் வரலாறுகளில் உள்ள தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் வன்முறைக்கான நடைமுறைகள், சுய காயப்படுத்தல் தொடர்பான நோக்கங்கள் மற்றும் உண்மையான விளைவுகள்.

தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்

தீவிர கருப்பொருள் ஆய்வானது சிறப்பு மென் பொருளால் ஆதரிக்கப்பட்டது (NVivo). இந்தக் கண்டுபிடிப்புகள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது இறந்து போன பெண்களின் சுய காயப்படுத்தல் அனுபவப் பாதையின் அமைப்புக்கள் மற்றும் விளக்கங்களாகும். இது வலியுடன் கூடிய பயணப் பாதை எனப்படும் ஒரு ஒட்டுமொத்த மற்றும் பாலின செயல்முறை மூலம் வெளிப்படுத்துகிறது.

நெறிமுறைப் பரிசீலனைகள்

உயிரோடிருந்த அனைத்துப் பெண்களும் சம்மதம் அளிக்கும் திறனை வெளிப்படுத்தினர். 18 வயதுக்குட்பட்ட பெண்களின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களும், அவர்களும், அவர்களுடைய சம்மதத்தை எமக்கு அளித்தனர். அனைத்துப் பங்கேற்பாளர்களும் அவர்கள் மருத்துவ ரீதியாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என உறுதி செய்யப்பட்ட பின்னரே அணுகப்பட்டார்கள் மேலும் ஆய்வுத் தகவல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் அவர்கள் விரும்பிய மொழியிலேயே (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) முன்னெடுக்கப்பட்டன. இவ் ஆய்வில் பங்குபற்றிய பெண்களுக்கும் சட்ட வைத்திய அதிகாரிகளுக்கும் பங்குபற்றியதற்காக அல்லது தற்கொலை தொடர்பான விசாரணை கோப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்காக எவ்விதமான ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஆராய்ச்சிகான நெறிமுறைக் குழு (Ref. P/135/08/2015),மருத்துவமனை நிர்வாகிகள், பங்கு பற்றிய வார்டுகளுக்குப் பொறுப்பான வைத்திய ஆலோசகர்கள் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸின் நெறிமுறை பரிசீலனைக் குழு என்பவற்றின் மூலம் இவ் ஆராய்ச்சிக்கான நெறிமுறை ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

இவ் ஆராய்ச்சி தொடர்பாக அல்லது ஆராய்ச்சி முறைகள் தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்பினால் நீங்கள் தரப்பட்டுள்ள சுருக்கக் குறிப்பைத் தரவிறக்கம் செய்யலாம் அல்லது எம்மைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலதிக தகவல்களுக்கு

பின்னணி மற்றும் நடைமுறைகள் பற்றிய சுருக்கக் குறிப்பைத் தரவிறக்கம் செய்ய

இலங்கையில் வாழும் மூன்று பெண்களின் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட வலியுடன் கூடிய பயணப் பாதையின் கதைகள்: பெண்கள் மற்றும் இளம் பெண் பிள்ளைகளின் சுய-தீங்குகளைத் தடுப்பதற்கான ஒரு பாதை எனும் திரைப்படமானது பெண்களின் தினசரி வாழ்க்கையில் வலியுடன் கூடிய பயணப் பாதை வெளிப்படுத்தப்படும் வழிமுறைகள் மற்றும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ள எமக்கு உதவுகிறது. இது பார்வையாளர்கள் தங்களுடைய சமூக வலை அமைப்பினுள் இவ்வாறான தோரணைகளை அடையாளங்காணவும் அவை எடுக்கக்கூடிய வடிவங்களை இனங்கண்டு கொள்வதிலும் உதவி செய்கின்றது.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படத்தைப் பார்வையிடலாம்.

Watch the full film now

அவர்களின் கதைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்